வாணாசுரன் என்னும் அசுரனுடைய படைத் தலைவர்களான ஓணன், காந்தன் என்னும் இரண்டு அசுரர்கள் பூசித்து வழிபட்ட தலம். அதனால் இத்தலம் 'ஓணகாந்தன்தளி' என்று அழைக்கப்படுகிறது. சலந்திரன் வழிபட்ட லிங்கமும் உள்ளது.
இக்கோயிலில் 'ஓணேஸ்வரர்', 'காந்தேஸ்வரர்', 'சலந்திரேஸ்வரர்' என்று மூன்று மூலவர்கள் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் 'காமாட்சி' அம்மனுக்கு தனிக் கோயில் உள்ளதால் இங்கு உள்ள எந்த சிவன் கோயிலுக்கும் அம்மன் சன்னதி கிடையாது.
சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது லிங்கங்கள் வெட்ட வெளியில் இருப்பதைப் பார்த்து கோயில் எழுப்ப வேண்டி சுந்தரர் பதிகம் பாடியபோது அங்கிருந்த புளிய மரத்தில் இருந்த காய்களெல்லாம் பொன்னாக மாறியது. அதைக் கொண்டு அங்கு கோயில் எழுப்பினர்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|